பீஸ் பனீர் மசாலா

peas-paneer-masala212
பீஸ் பனீர் மசாலா தேவையான பொருட்கள்

பனீர் செய்ய

பால்                                                          – 1 லிட்டர்

தயிர்                                                    – 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் or எலுமிச்சை ஜுஸ்        – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை                      – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள்                                          – 1/2 டீஸ்பூன்
உப்பு                                                         – சிறிது

முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, உப்பு போட்டு கடைசியாக எலுமிச்சம் ஜுஸை சிறிது சிறிதாக சேர்க்கவும். பால் நன்கு திரிந்தவுடன் ஒரு மஸ்லின் துணியில் ஊற்றி தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும். அந்த தண்ணீரை வைத்துக் கொள்ளவும். அதை கிரேவியில் பயன்படுத்தலாம். பின்னர் அந்த பனீரை ஒரு தட்டின் மீது பரப்பி அதன் மீது வெயிட் வைத்து செட் செய்து கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து பனீரை எடுத்து விரும்பிய அளவில் துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.

உரித்த பட்டாணி (or) காலிஃபிளவர்          – 1/4 கிலோ
வெங்காயம்                                                     – 2
தக்காளி                                                            – 2
துருவிய தேங்காய்                                        – 1/2 கப்
கசகசா                                                               – 2 டீஸ்பூன்
முந்திரி                                                             – 10
தயிர்                                                                  – 1/2 கப்
இஞ்சி                                                                – 1 இன்ச்
பூண்டு                                                               – 5 பல்
பட்டை                                                               – 1 துண்டு
ஏலக்காய்                                                          – 2
கிராம்பு                                                              – 2
சீரகப் பொடி                                                     – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி                                                  – 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி                                             – 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி                                                  – 1 டீஸ்பூன்
மிளகு                                                                 – 1/4 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி                                    – சிறிது
எண்ணெய், உப்பு                                             – தேவையான அளவு

பீஸ் பனீர் மசாலா செய்முறை

வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தயிர், தேங்காய், முந்திரி, கசகசா முதலியவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். அரைத்த வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்டுடன் பொடிகளை கலந்து மசாலாவாக்கிக் கொள்ள வேண்டும். பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த பட்டாணி, தக்காளி போட்டு வதக்கி பனீர் வடிகட்டிய நீரை ஊற்றி வேக விடவும். பனீரை சிறிது எண்ணெயில் வறுத்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய், முந்திரி விழுதைச் சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி, புதினா இலை தூவி இறக்கவும்.

Leave a Reply