டிசம்பர் 30க்கு பின்னர் செல்லாத நோட்டு வைத்திருந்தால் அபராதமா?

டிசம்பர் 30க்கு பின்னர் செல்லாத நோட்டு வைத்திருந்தால் அபராதமா?

கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் செல்லாத நோட்டுக்களை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கெடு முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 30க்கு பின்னர் செல்லாத நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு  செய்துள்ளது.

இதுபோன்ற சட்டம் இயற்றுவது மத்திய் அரசுக்கு புதிதில்லை. கடந்த 1978ஆம் ஆண்டு 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், புதிய நோட்டுகளை மாற்ற  அவகாசம் முடிந்தவுடன் இதேபோன்ற ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது புதிய சட்டம் தொடர்பாக இன்னமும் மத்திய அரசு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நாளை மறுநாள் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து  விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply