உயிரை பறித்த சிரிப்பு. ஒரு பள்ளி ஆசிரியையின் சோகக்கதை
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த 50 வயது ஆசிரியை ஒருவர் அதிகமாக சிரித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். சிரிப்பு மனிதனுக்கு நல்லது என்று கூறப்படும் நிலையில் அதிக சிரிப்பு உயிருக்கு ஆபத்து என்பதையும் இந்த சம்பவம் புரிய வைத்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த ஜாஸ்மின் அபுஸ்லின் என்ற 50 வயது பெண் ஆசிரியை தனது நண்பர் ஒருவரது வீட்டிற்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அப்போது மொட்டை மாடியின் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு ஜோக்கிற்காக அவர் சிரித்தார்
அதிக சிரிப்பினால் திடீரென பேலன்ஸ் இழந்த அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது