திண்டுக்கல் சீனிவாசனை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள். கலக்கத்தில் அதிமுக மேலிடம்

திண்டுக்கல் சீனிவாசனை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள். கலக்கத்தில் அதிமுக மேலிடம்

சசிகலா ஆதரவு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்த 122 எம்.எல்.ஏக்கள் மக்களின் மாபெரும் எதிர்ப்பு காரணமாக தொகுதிக்கு செல்ல பயந்து கொண்டு சென்னையிலேயே தங்கியுள்ளனர். ஒருசிலர் தைரியத்தை வரவழைத்து கொண்டு சொந்த தொகுதிக்கு சென்றபோது மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை அவ்வப்போது வரும் செய்திகளில் இருந்து அறிந்து வருகிறோம்

அந்த வகையில் சமீபத்தில் திருவாடனை தொகுதிக்கு சென்ற கருணாசுக்கு அந்த தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் தற்போது சசிகலா ஆதரவு எம்எல்ஏவான திண்டுக்கல் சீனிவாசனை அவருடைய தொகுதி பொதுமக்கள் விரட்டி அடித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்று அவர் தொகுதிக்குள் நுழைந்ததும் இதுநாள் வரையில் கண்டிராத அளவுக்கு மக்களின் எதிர்ப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக குறப்படுகிறது  ஊருக்குள் வந்த அவரது காரை சுற்றிவளைத்து மக்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பதட்ட நிலை உருவானது.. காரில் இருந்து இறங்கிய அவரின் மீது முட்டி மோதியதால் பரபரப்பு ஏற்படது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் இருந்த ஒருவர் சீனிவாசனின் வேட்டியை பிடித்து இழுத்தார். பதற்றமடைந்த சீனிவாசன் மற்றும் அவர் ஆதரவாளர்கள் உடனடியாக காரை எடுத்துக்கொண்டு திரும்பி சென்றனர்.

திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஏற்பட்ட நிலையால் அதிமுக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. எந்தவிதமான சலுகை திட்டங்களையும் அறிவித்து எங்களை ஏமாற்ற முடியாது என்றும், சசிகலா ஆதரவு அரசை வெளியேற்றும் வரை ஓய மாட்டோம் என்றும் திண்டுக்கல் மக்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

Leave a Reply