அதிகமாக மது குடிப்பவர்கள் யார்? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்
அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டயானா டினெஸ்கு என்ற குழுவினர் அதிகமாக மது குடிப்பவர்கள் யார்? என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் திருமணமாகி ஒற்றுமையாக வாழும் தம்பதிகள் குறைந்தளவு மது குடிப்பதாகவும், இளைஞர்களும் விவாகரத்து ஆனவர்களும் அதிகளவு மதுகுடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இளைஞர்கள், திருமணம் ஆனவர்கள், விவாகரத்து செய்தவர்கள், கணவனையோ அல்லது மனைவியையோ இழந்தவர்கள், திருமணமாகாத இளைஞர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான இளைஞர்கள் மது குடிப்பதாகவும், ஒருசிலர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. இளைஞர்களை அடுத்து கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் அதிகளவு மது குடிப்பவர்களாக உள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களில் ஆண்ஜோடிகளை விட பெண் ஜோடிகள்தான் அதிக மது குடிக்கின்றார்களாம். அதேப்போல் திருமணமானவர்கள் அல்லது முறைப்படி திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்பவர்கள் குறைந்த அளவிலேயே மது குடிக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.