தனிமையில் வாழ்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு ஆபத்து: அதிர்ச்சி தகவல்

தனிமையில் வாழ்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு ஆபத்து: அதிர்ச்சி தகவல்

தனிமையில் வாழ்ந்து வருபவர்கள் மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு காரணமாக முன்கூட்டியே மரணம் அடைவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

தனிமையில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறை திண்டாட்டமாக இருப்பதாகவும் அவர்கள் விரைவில் மரணம் அடைவதாகவும் டென்மார்க் நாட்டை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவை அறிவித்துள்ளார்.

இவரது ஆய்வில் 13,463 இருதய நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது என்று கேட்டபோது தனிமையில் இருப்பதால் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் பதில்கள் வந்துள்ளன. இதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply