தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
மிளகு – 20
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தணியா தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -2
வெண்ணெய் – 100 கிராம்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
மிளகைத் தூள் செய்து இஞ்சி ,பூண்டு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின்பு ஊற வைத்த சிக்கனை கடாயிலோ அல்லது குக்கரிலோ போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன்
இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்
பெப்பர் படடர் சிக்கன் மசாலா தயார்.