ஆலிவ் எண்ணெய் -1 தேக்கரண்டி
சிவப்பு குடை மிளகாய் – 1
பச்சை குடை மிளகாய் – 1
காளான் – கால் கப்
வெங்காயம் – 1 சிறியது
முட்டை – 1 மற்றும்
3 முட்டையின் வெள்ளை கரு
உப்பு மற்றும் மிளகு தூள் – 1 சிட்டிகை
செய்முறை :
• குடைமிளகாய், காளான், வெங்காயம் அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்..
• ஒரு கிண்ணத்தில் 1 முட்டை மற்றும் 3 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
• அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், காளான் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். காய்களின் கலர் மாறக்கூடாது
• 5 நிமிடம் வதங்கியவுடன் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி காய்கள் மீது முழுவதுமாக பரவும் படி நன்றாக பரப்பி விடவும்.
சுற்றி எண்ணெய் விடவும்.
• 2 நிமிடம் ஆனவுடன் திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் ஆனவுடன் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
• சத்தான இந்த ஆம்லெட்டில் குறைந்த கலோரி உள்ளது. டயட்டில் உள்ளவர்கள் இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.