பெப்பர் ஸ்பிரே தெளித்த எம்.பிக்கு சிறை?

நாடாளுமன்றத்தில் மிளகு ஸ்பிரே தெளித்த எம்.பிக்கு சிறைதண்டனை வழங்குவது போன்ற கடும் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அமைத்த நடவடிக்கை குழு பரிந்துரை செய்யும் என தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களாஇயில் கடந்த 13ஆம் தேதி தெலுங்கானா மசோதா நிறைவேறியபோது, மிளகுஸ்பிரே தெளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆந்திர மாநில எம்.பி ராஜகோபால். இதனாப் பல எம்.பிக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காரணமாக சபாநாயகர் மீராகுமார், எம்.பி. ராஜகோபால் மீது விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உரிமைக்குழுவை கேட்டுக்கொண்டார்.

இந்த உரிமைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் உறுபினர் பி.சி.சாக்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உறுப்பினர்களுக்கு  தவறிழைத்த உறுப்பினர்களுக்கு சிறை தண்டனைக்கு பரிந்துரைப்பது, தவறிழைத்த உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்குவது உள்ளிட்ட தண்டனைகளை அளிக்க அதிகாரம் உண்டு.

Leave a Reply