ஐ.பி.எல். ஸ்பான்சரில் இருந்து விலக முடிவு. பெப்சி நிறுவனம் அதிரடி

ஐ.பி.எல். ஸ்பான்சரில் இருந்து விலக முடிவு. பெப்சி நிறுவனம் அதிரடி
ipl
கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவால் வெற்றிகரமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல் போட்டிக்கு தற்போது சோதனை காலம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டிக்கு  தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து சூதாட்ட புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இந்த முடிவை பெப்சி நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெப்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply