குறுக்கு வழியில் தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் பெப்சி நிறுவனம்
மாணவர்களின் எழுச்சி போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த இன்னொரு வெற்றி பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்று வணிகர்கள் எடுத்த முடிவு. பெப்சி கோக் ஆகியவற்றை இனி விற்பனை செய்ய மாட்டோம் என்று வணிகர்கள் சங்கம் அறிவித்ததை அடுத்து அதன் விற்பனை படுபயங்கரமாக வீழ்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் பெப்சி பாட்டில்கள் ‘கெத்து’ என்ற பெயரில் தமிழில் புதிய நிறுவனத்தின் தயாரிப்பு போல வெளிவருகின்றது. மேலும் லோகோவை கூட சிறியதாக ஓரத்தில் போட்டு குறுக்கு வழியில் தனது விற்பனையை தொடர முயற்சித்து வருகிறது.
பெப்சி தன்னுடைய பெயரை மாற்றினால் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று குறுக்குவழியில் செல்லும் பெப்சியை மக்கள் இன்னும் கடுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் உடனடி எதிர்க்குரல் கொடுக்கத் ஆரம்பித்துள்ளனர்.