பேரறிவாளனை தாக்கிய கைதி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு
நேற்று முன் தினம் வேலூர் சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன் முன் சக கைதி ஒருவர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று அந்த கைதி தற்கொலைக்கு முயன்றதால் வேலூர் சிறையில் பதட்டம் அதிகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக உயர் பாதுகாப்புப் பிரிவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, மதுரையைச் சேர்ந்த ஆயுள் கைதியான ராஜேஷ்கண்ணா என்பவர் இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. பேரறிவாளனுக்கு 4 தையல்கள் போடப்பட்டு தற்போது அவர் குணமாகி வருகிறார்.
இந்த நிலையில், ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அதிகளவில் ராஜேஷ் கண்ணா சாப்பிடு தற்கொலைக்கு முயன்றதாகவும், இதன் காரணமாக சிறையில் மயங்கிக் கிடந்த ரானேஷ் கண்ணாவை உடனடியாக சிறைக்காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ்கண்ணாவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.