என்னை அடித்த கைதியிடம் நான் பேச வேண்டும். பேரறிவாளன் கோரிக்கை

என்னை அடித்த கைதியிடம் நான் பேச வேண்டும். பேரறிவாளன் கோரிக்கை

perarivalanகடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனை, ராஜேஷ்கண்ணா என்ற சக கைதி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலால் காயமடைந்த பேரறிவாளன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராஜேஷ் கண்ணா என்ற கைதி தன்னை ஏன் அடித்தார் என்பதை தெரிந்து கொள்ள அவரை நேரில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர்கள் சிவக்குமார், தொல்காப்பியம் ஆகியோர் மத்திய சிறையில் பேரறிவாளனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பேரறிவாளன் பரோல் மனு 8 மாத காலமாக நிலுவையில் உள்ளது. முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். தனது பெற்றோரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பரோல் வழங்க கேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.

அதே போல் தன்னை தாக்கிய ராஜேஷ் கண்ணாவிடம் 2 நிமிடம் நேரில் சந்தித்து பேச சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், எதற்காக என்னை அவர் தாக்கினார் என தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை தாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை தாக்கிய ராஜேஷ்கண்ணாவுக்கும் எனக்கும் எந்த முன்பகையும் இல்லை என பேரறிவாளன் கூறியதாகவும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply