எனில்.
பரந்து விரிந்த சமுத்திர அலையில்துள்ளிக் குதிக்கும் மீன்னே…
மச்ச அவதாரம் …..
ஒன்றாம்……
முந்நீர் விடுத்து மண் வளம் நோக்கி …ஆமை நடக்க….ஆனதே…
கூர்ம அவதாரம்..
இரண்டாம்….
நிலத்திடை நீள் பசி போக்க….புல் கிழங்கினைபுசித்த பன்றி…
வராக அவதாரம்….
மூன்றாம்….
‘ஊன்’னுடல் உதிரம் குடித்து ….நரமாமிசமும் தேடி….கதி கலங்கிட….
கர்ஜனை செய்த மனித விலங்காய்….
நரசிம்ம அவதாரம்…
நான்காம்…
வானுயர் ஆணவமழித்திட…அடியொரு மூன்றால் உலகெலாமளந்த…
வாமன அவதாரம்…
ஐந்தாம்….
பல்கலை -பயின்றும்… பயிற்றுவித்தும் பகலவன் போன்ற
பரசுராம அவதாரம்…
ஆறாம்….
ஒருவில்….ஒருசொல்….ஒருஇல்… வாழ்வென…
இராம அவதாரம்…
ஏழாம்…..
மழுவினை ஏந்தி….வழுவின்றி வாழ….உழுதிட்டு மகிழ…
பலராம அவதாரம்…
எட்டாம்….
வேய்குழல் நெய்த…கீதையை தந்த…
கிருஷ்ண அவதாரம்…
ஒன்பதாம்…எனினும்
குதிரை – திறன் கொண்ட ஏவுகனையால்….கூர்முனை ஆயுத
குண்டு துளைக்க…கொன்று குவிக்க…’கணினி ரோபோ’
கல்கி அவதாரம்…….
பத்தாய் நிறையும்…
திரு மால் வடிவில்….இரு ஐந்து அவதாரம் காட்டும்…..
பரினாம வளர்ச்சியை…
பகுத்தறிந்திடுவோம்….