வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீங்கிய மறுநாளே துபாய் சென்ற முஷரப்

வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீங்கிய மறுநாளே துபாய் சென்ற முஷரப்
Pervez Musharraf chest pain on the way to court
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிநாடு செல்வதற்கான தடையை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து அவர் இன்று அதிகாலை துபாய்க்கு சென்றார். அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேச துரோக வழக்கு, பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியிருந்த பர்வேஸ் முஷரப் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 2014ஆம் ஆண்டு சிந்து மாகாண நீதிமன்றம் நீக்கியதால் பாகிஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து முஷரப் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்ற உத்தரவுக்கு தடை பெற்றது. இதனால் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருந்த முஷரப் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

முஷரப்பின் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி முஷரப் வெளிநாடு செல்வதற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்று காலை முஷரப் துபாய் சென்றார். பாகிஸ்தானில் இருந்தால் தனக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவர் உடனடியாக வெளிநாடு சென்றுவிட்டதாகவும் அவர் எப்போது திரும்பி பாகிஸ்தான் வருவது குறித்த தெரியவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் துபாய் செல்ல விமானம் ஏறுவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் பேட்டியளித்த பர்வேஸ் முஷரப், “நான் இந்த நாட்டை நேசிக்கும் ஒருபோர் வீரன். சில வாரங்களிலோ, மாதங்களிலோ என் தாய்நாட்டுக்கு மீண்டும் வருவேன் என கூறினார்.

Chennai Today News: Pervez Musharraf leaves Pakistan after three-year travel ban lifted

Leave a Reply