ஜல்லிக்கட்டு: மீண்டும் நீதிமன்றம் சென்ற பீட்டா
ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை செய்திருந்த நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக முன்னாள் முதல்வர் டெல்லி சென்று ஜல்லிக்கட்டு நடத்த தனிச்சட்டம் இயற்ற ஏற்பாடு செய்தார். அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமீறல் நடந்ததாக கூறி, ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பீட்டா அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
பீட்டாவின் இந்த வழக்கு மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, தமிழ் வீரவிளையாட்டு கழகத்தை சேர்ந்த ராஜேஷ் இந்த பிரச்னையை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.