ஜல்லிக்கட்டு சட்டவிரோதம். இது தமிழர்களுக்கு புரியவில்லை. பீட்டா இந்திய தலைவர் திமிர் பேச்சு
தமிழக மக்கள் தெரியாமல் சட்டவிரோதமான ஒரு விளையாட்டுக்காக போராடி வருகின்றனர் என்று பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா ஜல்லிக்கட்டு சட்ட விரோதமானது என கூறியுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு இணையதளங்களில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன
பிபிசி வானொலிக்கு பேட்டியளித்த பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு அமல்படுத்தும் அவசர சட்டம் பற்றி எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள எல்லா வழிகளும் ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது.
விலங்குகளை காப்பாற்றுவது எங்களின் கடமை. ஜல்லிக்கட்டு விஷயத்தில் பீட்டா பலிகடா ஆகியுள்ளது. இதுதொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதமானது. இதுதமிழர்களுக்கு தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.