அசைவ உணவுகளுக்கு தடை. பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த பீட்டா

அசைவ உணவுகளுக்கு தடை. பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த பீட்டா

கடந்த ஜனவரி மாதம் இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடை தகர்ந்தது மட்டுமின்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் எழுந்தது. அவற்றில் ஒன்றுதான் பீட்டாவை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவது.

பீட்டா அமைப்பு தமிழர்களின் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பீட்டா அமைப்பே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் சிறிது காலம் அடக்கி வாசித்த பீட்டா, தற்போது மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. அதில் அரசு விழாக்களில் மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பு வைத்துள்ளது.

இதுகுறித்து பீட்டா அமைப்பு மேலும் கூறியதாவது: மாறிவரும் பருவநிலை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக அரசு செயல்பட வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், அசைவ உணவுகளைத் தவிர்ப்பதிலிருந்தே அதைத் தொடங்கலாம் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஜெர்மனியில், அரசு விழாக்களில் அசைவ உணவுகளுக்குத் தடை விதித்திருப்பதை பீட்டா சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply