ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியது.
அதில், ‘ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. காளைகளை பாதுகாக்க வேண்டுமானால், அத்தகைய அவசர சட்டம் எதையும் தாங்கள் பிறப்பிக்க வேண்டாம். மேலும், இதுதொடர்பான அவசர சட்டம் பிறப்பிப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது மட்டுமின்றி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்‘ என்று ‘பீட்டா’ கூறியுள்ளது.