ஷீனா போரா கொலை வழக்கு. இந்திராணியின் கணவர் திடீர் கைது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக அவரது தாயார் இந்திராணி மற்றும் அவரது டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் திடீர் திருப்பமாக இந்த கொலை வழக்கில் முன்னாள் ஊடக அதிபர் பீட்டர் முகர்ஜி நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசு இந்த வழக்கை சி.பி.ஐ மாற்றிய பின்னர் இந்திராணி முகர்ஜி, சஞ்சய் கன்னா, ஷியாம் ராய் ஆகிய மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் 150 பேரின் வாக்குமூலங்களும், 200 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை திடீர் திருப்பமாக இந்திராணியின் தற்போதைய கணவரும் முன்னாள் ஊடக அதிபருமான பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையின் போது பல்வேறு சாட்சிகள் பீட்டர் முகர்ஜியின் பெயரை குறிப்பிட்டுள்ளதால், அவர் கைது செய்யப்பட்டதாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் சிபிஐ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary: Peter Mukerjea arrested by CBI in Sheena Bora murder case