துணை முதல்வர் ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று விசாரணை

துணை முதல்வர் ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று விசாரணை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது மனைவி-மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களில் முறைகேடாக பலகோடி ரூபாய் சொத்துக்குவிப்பு செய்துள்ளதாக்வும், இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரனை நடத்த வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் விசாரணை செய்வார் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலாவை அடுத்து ஓபிஎஸ் மீதும் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply