பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது

பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் விலையை பொறுத்தவரை, வழக்கமாக மாதந்தோறும் இரு முறை (1 மற்றும் 16ஆம் ந்தேதி) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்க உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் ரூ.74.22 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.74.71 ஆக உயர்ந்தது. ரூ.57.23 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 57.32 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply