சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் ஒரு வாரத்தில் கணிசமாக குறைக்கப்படும் என டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளும் பெட்ரோல் விலை ஒரு ரூபாயும் குறையும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 15ம் தேதி முடிய உள்ள நிலையில் இதற்கு பின் விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, கடந்த 27 மாதங்களில் இல்லாத அளவு குறைந்து பீப்பாய்க்கு 91.75 டாலர் என்ற அளவை தொட்டுள்ளது.
இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தற்போது லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசு லாபம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இதன் பலனை அப்படியே மக்களுக்கு தீபாவளி பரிசாக அரசு அளிக்கும் என தெரிகிறது.