இன்று முதல் பெட்ரோல் விலை குறைவு. டீசல் விலை உயர்வு
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை 12 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசர் விலை என்ன என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
இதன்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3.02 அளவுக்கு குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலை ரூ. 1.47 உயர்த்தியுள்ளது. இது பொதுமக்களை பெரிதும் அதிருப்தி அடைய செய்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை படுமோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பீப்பாப் கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களுக்கு முன் $110 விற்பனையாகிவந்த நிலையில் தற்போது $30க்கும் குறைவாக விற்பனையாகிறது. மூன்று மடங்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தும் பெட்ரோல் விலையை மிகக்குறைந்த அளவில் குறைத்தும், டீசல் விலையை ஏற்றியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.