சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 91 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 84 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 7ஆவது முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இதேபோல் டீசலின் விலையும் 3ஆவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைந்த பின்னர் புதிய விலையின்படி புதுல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.63.33-க்கு விற்கப்படும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.52.51 ஆக இருக்கும்.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை உள்ளூர் வரியுடன் சேர்த்து 95 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.70.73-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 87 பைசா குறைந்து ரூ.57.08-ஆகவும் விற்கப்படும்.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசா குறைந்து ரூ.70.95-ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 93 பைசா குறைந்து ரூ.60.11-ஆகவும் இருக்கும்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசா குறைந்து, ரூ.66.05-க்கு விற்கப்படும். இதேபோல, டீசல் விலை லிட்டருக்கு 91 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ. 55.93-க்கு விற்பனை செய்யப்படும்
பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதால் பஸ் கட்டணம், ஆட்டோ கட்டணம், லாரி கட்டணம் ஆகியவைகளையும் குறைக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தவுடன் கட்டணத்தை ஏற்றுபவர்கள், அவை குறையும்போது கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை நியாயம்தான். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா/