பெட்ரோல், டீசல் விலை 76 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற செய்தி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் தலையில் இடி விழுந்த மாதிரி பெட்ரோல் டீசல் விலையும் ஒரே நாளில் 70 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறித்த விபரங்கள் பின்வருமாறு

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.16 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 92.19 எனவும் விற்பனையாகி வருகிறது