பெட்ரோல்-டீசல் விலை உயர்வு
கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துவந்தது. ஆனால் ஏப்ரல் இறுதிவாரம் முதல் மீண்டும் கச்சா எண்ணேய் விலை உயர்ந்து காணப்படுகிறது. மார்ச் இறுதியில் ஒர் பீப்பாய் கச்சாய் எண்ணெயின் விலை ரூ.1875 இருந்த நிலையில் தற்போது ரூ.3000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை இந்தியாவில் பெட்ரோ, டீசல் விலைகளை மாற்றி அமைத்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 காசுகளும், டீசல் விலை ரூ.1.26ம் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.