பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு. பொதுமக்கள் அதிருப்தி

petrolநேற்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த நிலையில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வந்தன.

ஆனால் சமீபத்தில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து  தற்போது மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09ம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இந்த விலை உயர்வு இன்று அதிகாலை 12மணி  முதல் அமலுக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலையுயர்வு காரணமாக விலைவாசி உயரும் அபாயம் இருப்பதாக் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply