நாளை முதல் பெட்ரோல் விலை ரூ.100: மத்திய அரசு தகவல்

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 116 க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில் நாளை முதல் பெட்ரோல் விலை 100 க்கும் குறைவாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சற்று முன் வெளியான அறிவிப்பின்படி பெட்ரோலுக்கான கலால் வரி ரூபாய் ஐந்து குறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது

இதன் காரணமாக நாளை குறைந்தது 15 ரூபாய் பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை முதல் பெட்ரோல் விலை ரூபாய் 100 அல்லது அதற்கும் குறைவாக விற்பனை செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் டீசலுக்கான கலால் வரி பத்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் டீசல் விலையும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது