அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் ஒத்தி வைப்பு.

petrol bunkஇன்று மாலை முதல் நடைபெற இருந்த பெட்ரோல் பங்க் வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவர் அறிவித்து உள்ளார்.

கமிஷன் தொகை உயர்வு உள்பட தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து இந்தியா திரும்பியதும் பரிசீலிப்பதாக மத்திய பெட்ரோல் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், அவருடைய உறுதி மொழியை ஏற்று இன்று மாலை முதல் நடத்த திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார்.

முன்னதாக இன்று மாலை முதல் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க்களும் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை 12 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply