இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் டீசல் விலையும் 19ஆம் தேதிக்கு பிறகு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் சமீப காலமாக கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துவருவதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து உலக நாடுகளில் குறைந்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலு உள்ளது. கடைசியாக கடந்த 1ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுமுதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதால் தேர்தல் விதிமுறைகள் அதற்கு பொருந்தாது.
இதுகுறித்து நேற்று (14ஆம் தேதி) பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறும்போதும், ”தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் டீசல் விலை 19ஆம் தேதிக்கு பிறகு குறையும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது