பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைப்பு!

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.1.46 குறைக்கப்பட்டுள்ளது. எனினும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருடனான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும், ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. இதற்கிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் பலனை நுகர்வோருக்கு வழங்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்தன.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை வாட் வரிகளுடன் சேர்ந்து ஒரு லிட்டருக்கு ரூ.1.46 குறைந்து ரூ.74.22 ஆக மாறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த மே மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அக்டோபர் 1ம் தேதி லிட்டருக்கு ரூ.3.87 வரை குறைக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் விலை குறைந்துள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 60 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.56.61 ஆக விற்பனையாகிறது. டீசல் விலையில் ஏற்படும் நஷ்டத்தை சரிகட்டுவதற்காக மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் அடிப்படையில் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply