இன்று முதல் பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு. பொதுமக்கள் மகிழ்ச்சி

petrol-hikeபெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 65 காசுகள் குறைக்கப்படும் என்றும் இந்த விலைகுறைப்பு இன்று அதிகாலை 12 மணிமுடஹ்ல் அமலுக்கு வரும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்ளும் நடைமுறையே தற்போது  தொடர்ந்து வருகிறது. அதே சமயம் பெட்ரோல் விலையை மத்திய அரசின் முன் அனுமதியுடனேயே எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானம் செய்கின்றன.

இந்நிலையில் கடந்த கடந்த சில  நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளது. இதனையடுத்து விலை வீழ்ச்சியின் பயனை பயனாளர்களுக்கு அளிக்கும் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. இந்தவிலைகுறைப்பு காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை குறைப்பு இன்று  முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply