சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி எதிரொலி. பெட்ரோல் விலை ரூ.2 குறைப்பு.

Petrol pricesசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் பெட்ரோல் விலையை ரூ.2 வரை குறைக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.89 முதல் ரூ.2.38 வரை குறைக்கப்பட உள்ளதாகவும் இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று $100க்கும் மேல் சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளது. அமெரிக்கா, ஈராக் நாட்டின் தீவிரவாதிகளை தாக்க தொடங்கிவிட்டதால், பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது என்ற கருத்து பரவியதன் காரணமாக பெட்ரோல் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் மாதங்களில் இன்னும் பெருமளவு பெட்ரோல் விலையை குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தயாராக உள்ளது.

Leave a Reply