பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் காரணமாக பெட்ரோல் விலை உலகம் முழுவதும் பயங்கரமாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்

இந்த உத்தரவை அடுத்து அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோல் விலை 4.173 டாலராக அதிகரித்துள்ளது

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்ததால் தான் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது