டில்லி பல்கலையின் சட்டத்துறை, 2 ஆண்டு முழுநேர சட்டப் படிப்பை வழங்கவுள்ளது. இப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் நபர்கள், LL.M. படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்ணோ அல்லது LL.B. படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்ணோ பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர விரும்புவோர், தனது ஆய்வு தொடர்பான ஒரு proposal தயார்செய்து சமர்ப்பிக்க வேண்டும். அந்த proposal -ஐ தயாரிக்க, பேராசிரியர்களின் உதவி, கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
Proposal சமர்ப்பிக்கும் கடைசித் தேதி – பிப்ரவரி 5.
விண்ணப்பதாரர்கள், நேர்முகத் தேர்வை எதிர்கொள்வார்கள். மேலும், தேவைப்பட்டால், எழுத்துத் தேர்விலும் பங்குபெற நேரிடும். அனைத்து விபரங்களும் www.du.ac.in என்ற வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தனியான முறையில், எந்த தகவலும் தெரிவிக்கப்படாது.
2015-16ம் கல்வியாண்டில், இந்த ஆராய்ச்சிப் படிப்பிற்கு, மொத்தம் 12 இடங்கள் உள்ளன. பிஎச்.டி. ஆய்வுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படலாம்.
விரிவான தகவல்களுக்கு http://www.du.ac.in/du/uploads/Admissions/2015/14012015_PhD_Notice.pdf