முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை

images (13)

செம்மொழித் தமிழ்ப் புலமை யை மேம்படுத்தும் நோக்கில் முனைவர் பட்ட ஆய்வு மற்றும் மேலாய்வுக்கு உதவித்தொகைகளை வழங்கவிருக்கிறது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். ஆய்வு மாணவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம், (முனைவர் பட்டத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும்) மேலாய்வு மாணவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பிற செலவினங்களுக்காக ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும், மேலாய்வு மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரமும் தரப்படும்.

இலக்கியம், மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், தொல்லியல், கல்வெட்டியல், இசையியல், நிகழ்த்துக்கலைகள், வழக்காற்றியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் 55 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்து, ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக விண்ணப்பித்த மாணவர்கள் ஆய்வு உதவித்தொகையைப் பெறலாம். முனைவர் பட்டத்திற்கான தலைப்பு  செம்மொழி நிறுவனம் வரையறுத்துள்ளவாறு, கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதும், 41 செவ்விலக்கியங்களோடு தொடர்புடையதுமாக இருக்க வேண்டும்.

இதே  துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மேலாய்வு உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு; www.cict.in

Leave a Reply