அமெரிக்க கூட்டணியில் இருந்து விலகி சீன கூட்டணியில் இணைந்த பிலிப்பைன்ஸ்

அமெரிக்க கூட்டணியில் இருந்து விலகி சீன கூட்டணியில் இணைந்த பிலிப்பைன்ஸ்

philippinesஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒருசில நாடுகளும் சீனாவுக்கு ஆதரவாக ஒருசில நாடுகளும் இருந்து வரும் நிலையில் இதுவரை அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த பிலிப்பைன்ஸ் தற்போத் திடீரென சீனாவுக்கு ஆதரவாக மாறியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக ரோட்ரிகோ சமீபத்தில் சீனாவுக்கு சென்றவுடன் இந்த அறிவிப்பு அந்நாட்டிடம் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனாவுக்கு ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் உள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் இணைந்துள்ளது. அமெரிக்காவிற்கு ஆதரவாக தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. இந்தியா உள்பட ஒருசில நாடுகள் நடுநிலைமை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க கூட்டணியில் இருந்து விலகியுள்ள பிலிப்பைன்ஸ் இனிமேல் அமெரிக்கப்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளாது என்று அறிவித்துள்ளது.

Leave a Reply