அமெரிக்கர்கள் குரங்குகள், முட்டாள்கள். பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

அமெரிக்கர்கள் குரங்குகள், முட்டாள்கள். பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

1பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தடுத்தது போல் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் துப்பாக்கிகளை விற்பனை செய்ய செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் இருந்து துப்பாக்கிகள் வாங்குவதில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பிலிப்பைன்ஸ் அதிபர், ஒருசில அமெரிக்க குரங்குகள் தங்கள் நாட்டிற்கு துப்பாக்கி விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி பேட்டியில் பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டி ரோட்ரிகோ கூறியதாவது: இந்த குரங்குகளை பாருங்கள், நாங்கள்(பிலிப்பைன்ஸ்) 26 ஆயிரம் துப்பாக்கிகளை வாங்க விரும்பினோம், ஆனால் அவர்கள்(அமெரிக்கா) விற்க விரும்பவில்லை.

எங்களிடம் உள்நாட்டில் தயாராகும் நிறைய துப்பாக்கிகள் இருக்கின்றன. இந்த அமெரிக்கன்கள் முட்டாள்கள். அதனால் தான் நான் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னிடம் முரட்டுத்தனமாக இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்த பேட்டியால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

Leave a Reply