ராணுவத்தின் வலிமையை கூற பெண்களை கேவலப்படுத்திய அதிபர்
பிலிப்பன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூட்டரெட் அவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டு பின்னர் எதிர்ப்பு வலுத்ததும் மன்னிப்பு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒருமுறை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சனம் செய்து பின்னர் மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ரோட்ரிகோ ட்யூட்டரெட்
இந்த நிலையில் சமீபத்தில் ராணுவ வீரர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிலிப்பன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யூட்டரெட், ராணுவர் வீரர்களின் பெருமையை , வீரத்தை புகழ்வதாக எண்ணி கொண்டு ஒருசர்ச்சைக்குரிய கருத்தை கூறி தற்போது படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றார்
”எங்கள் நாட்டு ராணுவத்தினர் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வலிமை பெற்றவர்கள்” என்பதுதான் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்து. இந்த கருத்துக்கு பெண்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பெண்களை காக்க வேண்டிய ஒரு அதிபரே பெண்கள் குறித்து இப்படி ஒரு கேவலமான கருத்தை வெளியிடுவது நியாயமா? என்று பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அனேகமாக வழக்கம்போல் இன்றோ, நாளையோ அவர் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.