நான் தான் முதலில் பலாத்காரம் செய்திருக்க வேண்டும். பிலிப்பைன்ஸ் அதிபர் வேட்பாளரின் சர்ச்சை கருத்து

நான் தான் முதலில் பலாத்காரம் செய்திருக்க வேண்டும். பிலிப்பைன்ஸ் அதிபர் வேட்பாளரின் சர்ச்சை கருத்து

philippinesபிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து அந்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ரோட்ரிகோ டிகாங் டுடெர்ட் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறைக்கைதிகளால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்துவ சேவகி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்தது குறித்து கருத்து தெரிவிக்கையில் அந்த பெண் மிகவும் அழகாக இருந்தார். அவரை நான் தான் முதலில் பலாத்காரம் செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரோட்ரிகோ டிகாங் டுடெர்ட் பேசியதாவது: கடந்த 1989ஆம் ஆண்டு சிறைக்கைதிகளால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ சேவகி ஜாக்குலின் ஹாமில் பலாத்காரம் செய்யப்பட்டதை நினைத்து கோபம் வந்தது. ஆனால் அவர் அழகாக இருந்தார். அவரை மேயர் என்ற முறையில் நான் அல்லவா முதலில் பலாத்காரம் செய்திருக்க வேண்டும். வீணாகிவிட்டதே என்று தெரிவித்துள்ளார்.

இவர் மேயராக இருந்தபோதுதான் டாவோ நகரில் உள்ள சிறையில் இருந்த கைதிகள் சிலர் காவலர்களின் துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த  ஜாக்குலின் என்ற பெண்ணை பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் வந்து ஆயுதம் வைத்திருந்த கைதிகளை சுட்டுக் கொன்றனர். அப்போது ஜாக்குலினின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply