பிலிப்பைன்ஸ் நாட்டில் பொங்கி எரிந்த எரிமலை: 60 ஆயிரம் பொதுமக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பொங்கி எரிந்த எரிமலை: 60 ஆயிரம் பொதுமக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மவுண்ட் மாயோன் என்ற எரிமலை கடந்த சில வாரங்களாகவே புகைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென நெருப்புக்குழம்புகள் பொங்கி எழுந்ததால் அந்த பகுதி முழுவதும் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

லூசான் என்ற பகுதியில் உள்ள இந்த எரிமலை வெடித்து சிதறியதால் சுமார் 5 கிமீ தூரத்திற்கு லாவா மற்றும் அதன் சாம்பல்கள் படிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும் சுமார் 60 ஆயிரம் பொதுமக்கள் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 600 மீட்டர் உயரத்திற்கு பெரும் கரும்புகை காணப்படுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply