ஃபோனை காதில் வைத்தாலே கால் ஆன் செய்யலாம்!!

mobile

மைக்ரோசஃப்ட் நிறுவனம் விண்டோஸ் ஃபோன்களில் கெஸ்டர்ஸ் பீட்டா(Gestures Beta) என்ற புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நமது ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மோஷன் கண்ட்ரோல் பவரைத் தருகின்றது. புதிய செயளி மூலம் வாடிக்கையாளர்கள் லூமியா போன்களை எடுத்து காதில் வைத்து அழைப்புகளை ஏற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் உள்ள சில அம்சங்கள் லூமியா 630, 635 மற்றும் 530 மாடல்களுக்கு மட்டும் குறைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. மேலும் விரைவில் வெளியாக உள்ள மைக்ரோசாப்ட் மெக்லேரன் ஃபோனிலும் கெஸ்டர்ஸ் வசதி கொடுக்கப்படும்.

இதன் மூலம் பயனாளிகள் டிஸ்ப்ளேவை தொடமாலேயே ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். மேலும், தரையின் மீது போனை நேராக வைப்பதன் மூலம் ஸ்பீக்கர் ஆன் ஆகும் என்றும், போனை திருப்பி வைத்தால் ஃபோன் மியூட் ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply