ஆணுறை பாக்கெட்டுக்களில் ஆபாச படங்கள். மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

ஆணுறை பாக்கெட்டுக்களில் ஆபாச படங்கள். மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

supremecourtஆணுறை பாக்கெட்டுக்கள் உள்பட எந்த ஒரு பொருளுக்கும் ஆபாச படங்களை விளம்பரமாக பயன்படுத்த கூடாது என்றும் ஆணுறை பாக்கெட்களில் அச்சிடப்படும் படங்களுக்கும், மற்ற பொருட்களின் விளம்பரப்படங்களுக்கும் இந்திய விளம்பர தர கவுன்சிலிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

ஆனால் இந்த உத்தரவுக்கு ஆணுறை தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த ஆணுறை தயாரிப்பாளர்களின் மனுவை தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான முதன்மை அமர்வு விசாரணை செய்தது.

அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மணிந்தர் சிங் அவர்களிடம் ஆணுறை பாக்கெட்டுகளில் அச்சிடப்படும் ஆபாச படங்கள் சட்டத்திற்கு புறம்பானவையா? இவை நடவடிக்கை எடுக்கத்தக்கவையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக ஆராய்ந்து, ஆறு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply