பரபரப்பு தகவல்
நடிகை ஜோதிகா சமீபத்தில் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் விஜய் சேதுபதி டுவிட்டர் பக்கத்தில் ஜோதிகா சொன்னது சரியான கருத்து தான் என்றும் கோவில்கள் விரைவில் மருத்துவமனைகளாக மாறும் நிலை ஏற்படும் என்றும் ஜோதிகாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் நபராக நான் குரல் கொடுப்பேன் என்றும் விஜய் சேதுபதி கூறியதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது
ஆனால் இந்த புகைப்படம் போலியானது என்றும் விஜய் சேதுபதியின் டுவிட்டர் பக்கத்தை போட்டோ எடுத்து அதில் போட்டோஷாப் வேலைகள் செய்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதற்கும் விஜய்சேதுபதிக்கும் சம்பந்தமில்லை என்றும் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் சும்மா இருக்கும் போட்டோஷாப் கலைஞர்கள் இதுபோன்ற சேட்டைகளை செய்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Fake ❌ pic.twitter.com/WR5vhXsXg7
— VijaySethupathi (@VijaySethuOffl) April 24, 2020