சகல நிதிகளுக்கும் அதிபதியான சிவன் பிச்சை ஏற்பவராக பிட்சாடனர் என்ற பெயரில் காட்சி தருகிறார். உலகிற்கே படியளக்கும் அவர், ஏன் பிச்சை கேட்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது உணவோ, பொருளோ அல்ல.தான் என்ற எண்ணத்தை உண்டாக்கும் ஆணவத்தை நம்மிடமிருந்து பெற்று, நம்மைச் சுத்தப்படுத்தவேதிருவோடு தாங்கி வருகிறார். ஆனால், ஆணவ எண்ணம் படைத்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களால் பிட்சாடனருக்கு ஏதும் கொடுக்க முடியவில்லை. முற்றும் துறந்த முனிவர்கள் மட்டுமே, தங்கள் ஆணவத்தை அவரது கபாலத்தில் இட்டு அருள் பெற்றனர். சிவாலயங்களில் பிட்சாடனரைத் தரிசிக்க நேர்ந்தால் நமது ஆணவத்தை பிச்சையாக அளிக்க வேண்டும்.