பில்லாலி புனித அந்தோணியர் ஆலயத்தில் தேரோட்டம்!

1

திருவாரூர்: திருவாரூர் அருகே பில்லாலி புனித அந்தோணியர் ஆலயத்தில் மண், மழை வளம் சிறக்க சிறப்பு தேரோட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், நாகை சாலையில் உள்ள பில்லாலியில் 500 ஆண் டுகளுக்கு மேற்பட்ட புனித அந்தோணியர் ஆலயம் உள்ளது. வறட்சி ஏற் பட்ட போது அப்பகுதியினர் இந்த ஆலயத்தில் வந்து மக்கள் படும் துயத்தை நேரில் வந்து பார் என வேண்டியதால், சமணஸ், மாதா மற்றும் அந்தோ ணியார் நேரில் பார்வையிட்டு, மக்கள் துயரத்தை கண்டு, துயருற்றுப் போக்கினார். அதன் பின் பெண்களுக்கு திருமணம், புத்திரபாக்கியம் கிடைத்ததுன், நீண்ட நாள் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் நோயில் இருந்தும் நீங்கினர். அதன் பின் சித்திரையில் ஏற்பட்ட வெப்பம் தனித்து திடீர் மழை பெய்தது. அன்றிருந்து மே மாதத்தில் கொடியேற்றி சமணஸ், மாதா மற்றும் அந்தோணியாரை அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா காட்சி நடத்தி வருகின்றனர். நேற்றுமுன் தினம் இரவு துவங்கிய தேரோட்டத்தின் போது திடீர் மழை பெய்தது. அதன் பின் இரவு 10 மணியில் இருந்து காலை 7.00 மணி வரை தேரோட்டம் நடந்தது. அப்பகுதியினர் உடன் சென்று சுண்டல் வழங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

Leave a Reply