[carousel ids=”60924,60925″]
விநாயகருக்கு சித்தி, புத்தி என்ற துணைவியரும், சுபன், லாபன் என்ற மகன்களும் உண்டு. (குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் உள்ள அம்பாஜி மாதா கோயிலில், விநாயகரின் குடும்ப சந்நிதியே உள்ளது) அந்த புதல்வர்களை ஒரு ரக்ஷா பந்தன் தினத்தன்று நாரதர் சந்தித்தார்.அவர்களிடம், உங்களுக்கும் சகோதரிகள் இருந்தால், ரக்ஷை கட்டியிருப்பார்களே என்றார். உடனே பிள்ளைகள், தங்களுக்கும் ஒரு தங்கை வேண்டுமென தந்தையிடம் முறையிட்டனர். தன் பிள்ளைகளுக்காக விநாயகரும் சரஸ்வதி, லட்சுமி,பார்வதி ஆகிய மூன்று தேவியரின் அம்சம் கொண்ட பெண்குழந்தையை உருவாக்கினார். அக்குழந்தையைக் கண்ட சகோதரர்கள் சந்தோஷம் அடைந்தனர். இதன் காரணமாக அவள் “சந்தோஷி’ எனப்பட்டாள். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து சந்தோஷியை வழிபட்டால் திருமணம், கல்வித்தடை நீங்கும்.