பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்: சந்தனக்காப்பு அலங்காரம்!

LRG_20150915102553201533

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.  ஆண்டுக்கு ஒரு முறை சந்தனக்காப்பில் விநாயகர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா,  செப்.8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் வெள்ளி கேடகத்தில் சுவாமி புறப்பாடும், தினசரி இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும்  நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கஜமுகசூர சம்ஹாரம் நடந்தது. நேற்று இரவில் மயில் வாகனத்தில் கற்பகவிநாயகர் திருவீதி வலம் வந் தார். இன்று குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். நாளை மாலை தேரோட்டம் நடைபெறும்.  காலையில் விநாயகரும், சண்டி÷ கஸ்வரரும் தனித் தேர்களில் எழுந்தருளுவர். மாலையில் தேரோட்டம் நடைபெறும். பெண்கள் உற்சாகமாக சண்டிகேஸ்வரர் தேரை இழுப்பர்.  மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை, மூலவர் விநாயகர் சந்தனக்காப்பில் தரிசனம் தருவார். விநாயகர் சதுர்த்தியன்று  காலையில்  தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

Leave a Reply