150 பேர் பலியான ஜெர்மன் விமான விபத்திற்கு விமானியே காரணமா? திடுக்கிடும் தகவல்

germanwingsகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் என்ற பயணிகள் விமானத்தின் விபத்திற்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியே காரணம் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை விமானி வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.germanwings 1

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானத்தில் விமான ஊழியர்கள் உள்பட 150 பேர் பயணம் செய்தனர். விமானம் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை அறியும் ஆய்வு பணி தொடங்கியது.germanwings 2

இந்த ஆய்வில் விபத்துக்குள்ளான விமானத்தின் துணை பைலட், மற்றொரு விமானி கழிவறைக்கு சென்றிருந்தபோது, விமானி அறையின் கதவை மூடிவிட்டு விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி வெடிக்க செய்ததாக கருப்பு பெட்டியில் பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். துணை விமானியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணையை ஏற்கனவே அதிகாரிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

  germanwings 3 germanwings 4 germanwings 5

Leave a Reply